டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை மார்ச் 21ம் தேதி கைது செய்து திகார் சிறையில் அடைத்தது. அவர் இந்த வழக்கை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா அமர்வில் மனு தாக்கல் செய்தார். தன் மீது வழக்கு தொடர்ந்ததே தவறு என்று அவர் வழக்கில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளே ஏன் நீங்கள் ஜாமீன் கேட்க கூடாது என கூறினர். இதற்கு அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் அவருக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா அமர்வு, ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். எனவே கெஜ்ரிவால் இன்று மாலை அல்லது நாளை சிறையில் இருந்து வெளியே வருவார். ஜூன் 2ம் தேதி அவர் சரணடையவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவில் கூறிஉள்ளனர்.
ஓட்டு எண்ணிக்கை முடிவடையும் வரை அதாவது ஜூன் 5வரை இடைக்கால ஜாமீன் கேட்கப்பட்டது. அதை நீதிமன்றம் ஏற்கவில்லை
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது அமலாக்கத்துறைக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. டில்லியில் வரும் 25ம் தேதி தேர்தல் நடக்கிறது. எனவே கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரம் செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் பரப்புரை செய்யலாம் என்றும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதே நேரத்தில் வழக்கு குறித்து வெளியில் பேசக்கூடாது என்றும் நிபந்தனை விதித்தது. ஒரு முக்கிய தலைவரை பரப்புரை செய்ய விடாமல் தடுப்பது சரியல்ல என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி இருந்தனர்.