தமிழ்நாட்டில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. இதில் 8 லட்சத்து 94 ஆயிரத்து264 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 91.55% தேர்ச்சி ஆகும். இது கடந்த ஆண்டை விட 0.16% கூடுதல் தேர்ச்சி . வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று உள்ளனர். அதாவது 5.95% மாணவிகள் கூடுதலாக தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.
ஒவ்வொரு பாடத்திலும் எத்தனை பேர் 100க்கு 100 மார்க் வாங்கி உள்ளனர் என்ற விவரம் வருமாறு: தமிழில் 8 மாணவர்கள். ஆங்கிலம் 415, கணிதம் 20 .691, அறிவியல்5104, , சமூக அறிவியல் 4428 பேர் 100க்கு 100 மார்க் வாங்கி உள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.