கோவை மாவட்டம் பொள்ளாச்சி கடைவீதியில் பல தலைமுறைகளாக செயல்பட்டு வரும் பிரபு என்பவருக்கு சொந்தமான லட்சுமி நகை கடையில் ஜிஎஸ்டி நுண்ணறிவு புலனாய்வு துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். மூன்று குழுக்களாக வந்த அதிகாரிகள் இன்று காலை முதல் நகை கடையில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நகை கடை உரிமையாளர் வரிஏய்ப்பு செய்துள்ளதாக ஜிஎஸ்டி புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ேசாதனை நடப்பதால் கடைக்குள் யாரையும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இந்த சோதனையானது தொடர்ந்து ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
