சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு… தமிழகத்தில் நேற்று கோவை, சேலம், சென்னை மீனம்பாக்கம், தஞ்சாவூர், திருத்தணி, வேலுார், ஈரோடு, மதுரை நகரம், கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், திருநெல்வேலி, திருச்சி என 12 இடங்களில் 100 டிகிரிக்கும் மேலாக வெப்பம் பதிவாகியுள்ளது. நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும். சில இடங்களில் அதிக வெப்பம் பதிவாகும்போது காற்றில் கலந்துள்ள ஈரப்பதம் அதிகரிப்பால், அசவுகரியங்கள் ஏற்படும்.
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2024/05/கனமழை-பெய்யும்.jpg)