அரியலூர் -தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், இன்று மாலை ஏலாக்குறிச்சி பிரிவு சாலை அருகே ஜல்லி ஏற்றி வந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக லாரியின் பின்னால் வேகமாக மோதியது. இந்த சம்பவத்தில் பயணம் செய்த 4 வாலிபர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாடமாக இறந்தனர். இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் விபரம்…
1. ஈஸ்வரன் (24) த/பெ.குருமூர்த்தி மேல விதி தஞ்சை.
2. புவனேஷ் கிருஷ்ண சாமி (18) த/பெ.பலராமன் தஞ்சை
3. செல்வா( 17) த/பெ.தேவா மேலவீதி தஞ்சை.
4.சண்முகம் (23) த/பெ.விசு கரந்தை,
புரோகிதம் செய்யும் தொழிலை செய்யும் 4 பேரும் தஞ்சையைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் அரியலூரில் இன்று நடைபெற்ற ஒரு ஹோம நிகழ்ச்சியை முடித்து விட்டு வீட்டிற்கு சென்ற போது ஏற்பட்ட விபத்தில் இறந்ததும் தெரியவந்துள்ளது. நான்கு பேரின் உடல்களும் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.