குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தில் கராசனா கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மாணவர்களின் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 4-ம் வகுப்பு படித்து வரும் மாணவி மனிஷாபாய் வம்சிபிள் என்ற மாணவி எழுதிய தேர்வுகளில் குஜராத்தி மற்றும் கணித பாடங்களில் தேர்வு மதிப்பெண்அதிகபட்சமாக 200-க்கு 211 மற்றும் 212 பெற்றதாக முடிவுகள் வழங்கப்பட்டது.
அந்த மார்க் பட்டியலை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவி தனது மதிப்பெண் சான்றிதழை தனது வீட்டிற்கு கொண்டு சென்று பெற்றோரிடம் காட்டினார். இதைப்பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் தங்கள் மகளுக்கு வழங்கப்பட்ட விவரங்களை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதனால் கல்வித்துறை அதிர்ச்சி அடைந்தது. உடனடியாக அந்த மாணவியின் மார்க் ஷீட் திரும்பபெறப்பட்டது. தவறு நடந்து விட்டதாக கல்வித்துறை விளக்கம் அளித்தது.
இதைத்தொடர்ந்து மாணவியின் மதிப்பெண் விபரங்கள் சரி செய்யப்பட்டன. அதன்படி மாணவி குஜராத்தி பாடத்தில் 200-க்கு 191 மதிப்பெண்களும், கணிதத்தில் 200-க்கு 190 என திருத்து வழங்கினர்.
1