காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈவெரா திருமகன் மரணம் அடைந்ததையடுத்து காலியாக இருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறதுஇந்த தேர்தலில், அதிமுக கூட்டணி சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஈரோட்டில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள், இன்று த.மா.கா. தலைவர் வாசனை சந்தித்து பேசினர். அ.திமுக தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், பா. வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோர் சந்தித்தனர்.
இந்த சந்திப்பு குறித்து ஜி.கே. வாசன் கூறியதாவது:- கடந்த முறை நாங்கள் போட்டியிட்டோம்; இம்முறை அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் எங்கள் இலக்கு கூட்டணி வெற்றிபெற வேண்டும் என்பது தான். வெற்றி வியூகத்தை வகுக்கவே அ.திமு.க மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினேன்.திமு.க அரசுக்கு எதிர்மறையான வாக்குகள் நாளுக்கு நாள், நொடிக்கு நொடிக்கு அதிகரித்து கொண்டே வருகின்றன. இரண்டொரு நாளில் கலந்து பேசி வேட்பாளரை அறிவிப்போம்.கூட்டணி தலைவர்களோடு பேசி வேட்பாளரை முடிவு செய்வோம். இடைத்தேர்தல் மட்டுமின்றி தமிழகஅரசியல் நிலவரம் குறித்து பேசினோம் என கூறினார்.