நாடாளுமன்ற 3ம் கட்ட தேர்தலில் நாடு முழுவதும் 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடக்கிய தேர்தலில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள்.இந்நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 10.57 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.11 மணி நிலவரப்படி இந்தியா முழுவதும் 25.41% வாக்குப்பதிவு ஆகி உள்ளது.
மாநிலம் வாரியாக காலை 9 மணிக்கு பதிவான வாக்கு சதவீதம்: அசாம் – 10.12% பீகார் – 10.03% சத்தீஷ்கார் – 13.24% தத்ரா-ஹவேலி-டையூ-டாமன் – 10.13% கோவா – 12.35% குஜராத் – 9.87% கர்நாடகா – 9.45% மத்தியபிரதேசம் – 14.22% மராட்டியம் – 6.64% உத்தரபிரதேசம் – 11.63% மேற்குவங்காளம் – 14.60%
கர்நாடக மாநிலம் கலாபுர்கியில் உள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வாக்களித்தார். கலாபுர்கி தொகுதியில் ராதாகிருஷ்ணா காங்கிரஸ் வேட்பாளராகவும், உமேஷ் ஜி ஜதாவ் பா.ஜ.க. சார்பிலும் போட்டியிடுகின்றனர்.