12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 9 ஆயிரத்து 644 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 8 ஆயிரத்து 909 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 90.15 சதவீதம் இருந்த நிலையில் இந்த ஆண்டு 92. 38 % மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 2.23 சதவீதம் அதிகரித்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை ஆசாத் பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளது. வணிகவியல் துறை மாணவி சாய்கண்ணமை 595 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்
தமிழ் -99
ஆங்கிலம் 98
பொருளாதாரம் 100
வணிகவியல் 100
கணக்கு பதிவியியல் 98
கணினி பயன்பாடுகள் 100
மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பள்ளி நிர்வாகத்தினர் வாழ்த்து தெரிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். ஆடிட்டர் ஆவதே லட்சியம் என்று மாணவி தெரிவித்துள்ளார்.
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2024/05/stus1.jpg)