கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள கிட்ட சூராம்பாளையம், , குரும்பபாளையம், ஆட்சி பட்டி ஊர் பொதுமக்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தின் நேர்முக உதவியாளர் காயத்ரியிடம் மனு அளித்தனர், மனுவில் திண்டுக்கல் சாம்ராஜ்நகர் நெடுஞ்சாலை கிட்ட சூராம்பாளையம் குரும்பபாளையம் சர்வீஸ் ரோடு உள்ளது,கிராமங்கள் வழியாக திண்டுக்கல் திட்ட அமலாக்க பிரிவின் மூலம் புளியம்பட்டியில் இருந்து ஆட்சி பட்டி கோவை பொள்ளாச்சி ரோடு சந்திப்பு கிடையே தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலமாக அமைக்கப்பட்ட வரும் இடது மற்றும் வலது பக்கவாட்டில் அமைக்கப்பட்டுள்ள சர்வீஸ் ரோடுகள் நடுவில் மரங்கள் நடுவதாகவும் இதனால் வெள்ளநீர் வடிகால் அமைப்பதற்கும் குழிகள் தோண்டப்பட்டுள்ளது, சர்வீஸ் ரோடுகளில் பக்கவாட்டு பகுதியில் உள்ள நெடுஞ்சாலை அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகளை போக்குவரத்து இந்த சர்வீஸ் ரோட்டை பயன்படுத்தும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் சர்வீஸ் ரோடு நடுவில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும் எனவும் சாலைகளை போக்குவரத்துக்கு பயன்படுத்த பொதுமக்கள் பயன்படுவார்கள் என தெரிவித்தனர்.