கரூர் மாவட்டம் புலியூரை அடுத்துள்ளது வெங்கடாபுரம் கிராமம். இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்தின் பொது இடத்தில் அம்பேத்கர் நற்பணி மன்றம் சார்பில் 4 சிமெண்ட் பெஞ்சுகள் அமைக்கப்பட்டிருந்தது. அதே கிராமத்தில் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை தாசில்தாராக பணியாற்றும் ஜெயவேல் காந்தன் என்பவரும் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர்கள் தங்களுடைய கார் நிறுத்த இடம் இல்லை என்பதால் அங்கு அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் பெஞ்சுகளை
உடைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கேட்ட பொதுமக்களிடம் தகாத வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். யாரிடம் வேண்டுமானாலும் போய் புகார் செய்யுங்கள் ஒன்றும் செய்ய முடியாது என மிரட்டும் தோணியில் பேசுவதாக கூறி அக்கிராமத்தை சார்ந்த கிராம மக்கள் 60க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துச் சென்றனர்.