திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில். இந்திய விலங்குகள் நல வாரிய அமைப்பின் உறுப்பினர் மற்றும் ஜல்லிக்கட்டு கண்காணிப்புக் குழுத் தலைவர் டாக்டர் எஸ்.கே.மிட்டல் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், முன்னிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது தொடர்பான ஜல்லிக்கட்டு விழாக்குழுவினருடனான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் எஸ்தர் ஷீலா, ஜல்லிக்கட்டு கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் ஆயூப்கான், குபேந்திரன், முகமதுஹனிப், ராமகிருஷ்ணன், அரசுத்துறை அலுவலர்கள், ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் கலந்து கொண்டனர்.