Skip to content
Home » அவதூறு அச்சம் காரணமாகவே கொரோனா சான்றிதழில் இருந்து பிரதமர் படம் நீக்கம்…

அவதூறு அச்சம் காரணமாகவே கொரோனா சான்றிதழில் இருந்து பிரதமர் படம் நீக்கம்…

பீகார் மாநிலம், தானாபூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்ஜேடி தலைவர் மிசா பாரதி, “எந்த ஒரு வேலையை செய்தாலும் அது தன்னுடைய சாதனை என்று பெருமை தேடிக்கொள்வது பிரதமர் மோடியின் பழக்கம். தற்போது, கொரோனா தடுப்பூசி குறித்து சந்தேகத்திற்குரிய முடிவுகள் வெளி வருகின்றன. எனவே, அவதூறுக்கு பயந்து தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து அவரது படம் நீக்கப்பட்டுள்ளது.

கொரோனா சான்றிதழில் இடம்பெற்ற பிரதமர் மோடி படம்
மகாகத்பந்தன் கூட்டணி தலைவர்கள் பொது மக்களால் உருவாக்கப்படுகிறார்கள். கொரோனா தடுப்பூசி குறித்து ஒவ்வொரு நிலையிலும் விசாரணை நடத்த வேண்டும். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் (எம்சிசி) அமலில் உள்ளதால் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமரின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டின் தொடக்கத்தில் கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றபோது கூட, பிரதமரின் படம் கொரோனா சான்றிதழில் இருந்து அகற்றப்பட்டது.

தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக தலைவர்கள் சிலை மூடல் (கோப்பு படம்)
தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக தலைவர்கள் சிலை மூடல் (கோப்பு படம்)

அதே நேரத்தில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியால் வெகு சிலருக்கு ரத்தம் உறைதல் பாதிப்பு ஏற்படலாம் என ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் சமீபத்தில் தெரிவித்தது. இந்நிலையில் மிசாராபாரதி, தடுப்பூசி மீதான சந்தேகம் எழுந்துள்ளதால், அவதூறு ஏற்பட்டு விடும் என அஞ்சி பிரதமரின் படம் நீக்கப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.

மிசார பாரதி, பீகாரின் பாடலிபுத்ரா மக்களவைத் தொகுதியில் ஆர்ஜேடி வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *