’லிஃப்ட்’, ‘டாடா’ என அடுத்தடுத்து கவனம் ஈர்க்கும் படங்களில் நடித்து வருகிறார் நடிகர் கவின். அவரது நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் ‘ஸ்டார்’ படம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேட்டிக் கொடுத்து வருகிறார் கவின்.
இந்நிலையில், நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிப்பதாக எழுந்த பேச்சு உண்மைதானா என்கிற கேள்விக்கு, , “விஜய் மகன் என்னிடம் பேசியது உண்மைதான். ஜேசன் சஞ்சய் என்னிடம் கதை சொன்னார். மிகவும் எளிமையாக நட்பு ரீதியிலான சந்திப்பு அது. அந்த சமயத்தில் நான் அடுத்தடுத்துப் படங்கள் நடிக்க கமிட் ஆகியிருந்தேன்.