மேற்கு வங்க மாநில கவர்னராக இருப்பவர் ஆனந்த போஸ். இவர் கவர்னர் மாளிகையில் பணியாற்றிய தற்காலிக பெண் ஊழியர் ஒருவரை பணி நிரந்தரம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக கொல்கத்தா போலீசார் கவர்னரிடம் விசாரிக்க நடவடிக்கை மேற்கொண்டபோது, கவர்னர் மாளிகைக்குள் போலீசார் நுழையக்கூடாது என தடை விதித்தார் கவர்னர் போஸ்.
தன் மீது வீண் பழி சுமத்தப்பட்டு உள்ளது. அரசியல் பின்னணி இதில் உள்ளது என கூறிய கவர்னர் விசாரணைக்கு யாரும் கவர்னர் மாளிகைக்குள் வரக்கூடாது என தடை விதித்ததை மேற்கு வங்க மக்கள் கடுமையாக கண்டித்து உள்ளனர். பாரதிய ஜனதா கூட்டணி கட்சியான மதசார்பற்ற ஜனதா தள எம்.பி. கர்நாடகத்தில் பல பெண்களை பலாத்காரம் செய்த நிலையில், இப்போது மேற்கு வங்க கவர்னர் மீதும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.