வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதமடித்து வருகிறது. வெயிலினை கருத்தில் கொண்டு பொதுமக்கள் உடலினை குளிர்ச்சியாகவும், கட்டுக்குள் வைக்கவும் பொதுமக்கள் அதிகளவில் பழங்கள் மற்றும் குளிர்பானங்களை பருகி வருகின்றனர்.
இயற்கையாக கிடைக்கக்கூடிய, நம் தாகத்தை தணிக்க கூடிய இளநீர், நொங்கு போன்றவற்றின் தேவை பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இளநீர், நுங்கு கடைகள்
அதிகரித்துள்ளது. இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் பொது மக்கள் இளநீர் கடையை பார்த்தவுடன் இறங்கி இளநீர் குடித்துவிட்டு செல்கிறார்கள்.
உடல் உஷ்ணத்தை குறைக்கும் இளநீர், பலவிதமான பழச்சாறு, கூழ், கரும்புச் சாறு போன்றவற்றை பொதுமக்கள் விரும்பி அருந்துவதால், இவற்றின் விற்பனை அதிரித்துள்ளது. சாதாரண நாட்களில் ரூ. 40க்கு விற்கப்பட்ட செவ்விளநீர் தற்போது ரூ. 50 வரை விற்பனையாகிறது. பொள்ளாச்சியில் இருந்து அதிக அளவில் இளநீர் இறக்குமதி செய்யப்பட்டு அதிக அளவில் விற்பனை நடைபெற்று வருகிறது. மேலும் தர்பூசணி, எலுமிச்சை போன்றவற்றின் விலைகளும், பழங்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.