குஜராத்தின் ஆனந்த் நகரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில்… “காங்கிரஸ் இங்குத் தேர்தலில் வெல்ல முடியாமல் தவிப்பதை பார்த்து பாகிஸ்தான் அழுகிறது. பாகிஸ்தான் தலைவர்கள் காங்கிரசுக்காகப் பிரார்த்தனை செய்கின்றனர். இங்குள்ள இளவரசரை (ராகுல் காந்தி) அடுத்த பிரதமராக்கப் பாகிஸ்தான் துடிக்கிறது. இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. ஏனென்றால் காங்கிரஸ் கட்சியே பாகிஸ்தானின் சீடர் என்பது நமக்கு முன்பே தெரியும். இப்போது பாகிஸ்தானுக்கும் காங்கிரஸுக்கும் இடையிலான கூட்டணி அம்பலமாகி உள்ளது. இந்தியாவில் ஒரு பலவீனமான பிரதமர் வேண்டும் என்றே பாகிஸ்தான் நினைக்கிறது. இப்போது,இந்தியா கூட்டணி ஓட்டு ஜிகாத்தை கையில் எடுத்துள்ளது. இதுவரை நாம் ‘லவ் ஜிகாத்’, ‘லேண்ட் ஜிகாத்’ பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஜிகாத் என்றால் என்ன என்று உங்கள் அனைவருக்கும் தெரியும் என நினைக்கிறேன்.ஓட்டு ஜிகாத் என்பது பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ்க்கு ஆதவாக வாக்களிக்க வேண்டும் என முஸ்லீம் தலைவர் ஒருவர் கூறியிருக்கிறார்.இது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயலாகும், இதனை ஒரு காங்கிரஸ் தலைவர் கூட இதைக் கண்டிக்கவில்லை இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.