திருச்சி மண்ணச்சநல்லூரை அடுத்த திருப்பைஞ்ஞீலி நீலிவனேஸ்வரர் ஆலயத்தில் கட்டமுது பெருந்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது – நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் அப்பரடிகள் சைவத் திருவிழாவில் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
காவிரி கரையில் அமைந்திருக்கும் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலமாகவும் … திருமண தடை நீக்கும் ஆலயமாகும் விலங்கும் திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் ஆலயத்தில் வைவ திருவிழாவான கட்டமுது நிழா இன்று நடைபெற்றது.
தேவார நால்வரில் ஒருவரான அப்பர் திருப்பைஞ்ஞீலி இறைவனை தரிசனம் செய்ய வந்தபோது கடுமையான
வெயிலில் சிக்கி கீழே விழுந்துவிட … சிவபெருமான் சிவாச்சாரியார் வேடத்தில் வந்து கட்டு சோற்றை உணவாக அளித்து களைப்பாற்றி பின்னர் ஆலயத்திற்கு அழைத்து வந்து காட்சி கொடுத்ததாக வரலாறு கூறப்படுகிறது.
அந்த வகையில் இறைவனே அடியாருக்கு உணவளித்ததால் திருக்கட்டமுது என்கிற பெயரில் வருடம் தோறும் இந்த சைவ திருவிழா கொண்டாடப்படுகிறது
நீலிவனேஸ்வரர் உணவு கொடுத்த அதே இடத்தில் அப்பர் ஸ்வாமிகளுக்கு சரியாக 12 மணி அளவில் கட்டுச்சோறு கொடுக்கப்பட்டது …
இந்த விழாவில் நூற்றுக்கணக்கான சிவனடியார்களும் – ஆயிரக்கணக்கான மக்களும் திரண்டு சிவனை வழிபட்டு சென்றனர்