சென்னையில் மெத்தபட்டமைன் என்ற போதைப் பொருளைப் பதுக்கி வைத்திருந்த ராகுல், காதர் மைதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் கைதான ராகுல் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் என கூறப்படுகிறது. கைதான காதர் மொய்தீனிடம் நடத்திய விசாரணையில் சுல்தான் என்பவரிடம் இருந்து வாட்ஸ் அப் குழு மூலம் போதைப்பொருள் வாங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். போதைப்பொருளைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக இன்று திருவான்மியூரில் உள்ள ராகுல் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.