முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஒருமாதமாக தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டார். தமிழகத்தில் கட்ந்த 19ம் தேதி தேர்தல் முடிந்த நிலையில், 29ம் தேதி முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் ஓய்வுக்காக ெகாடைக்கானல் சென்றார். அங்குள்ள பாம்பார்புரம் தனியார் விடுதியில் தங்கியிருந்த முதல்வர் அங்கேயே காலையில் நடைபயிற்சி மேற்கொண்டார். கோல்ப் ஆடினார். நேற்ற மாலை குடும்பத்தினருடன் படகு சவாரி செய்தார்.
வரும்4ம் தேதி வரை கொடைக்கானலில் தங்கி இருப்பார் என கூறப்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை சென்னை திரும்புகிறார். கொடைக்கானலில் இருந்து கார் மூலம் மதுரை வந்து அங்கிருந்து விமானம் மூலம் இன்ற மாலை சென்னை வந்தடைகிறார். அவரை அதிகாரிகள் வழியனுப்பி வைக்கிறார்கள்.