Skip to content
Home » நீட் ஹால் டிக்கெட்….. இன்று முதல் டவுன்லோடு செய்யலாம்

நீட் ஹால் டிக்கெட்….. இன்று முதல் டவுன்லோடு செய்யலாம்

2024-25 கல்வி ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் 5-ம் தேதி மதியம் 2 மணிமுதல்  மாலை 5.20 மணி வரை  நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கியது. www.nta.ac.in, exams.nta.ac.in/NEET என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. இதன்படி, மருத்துவ படிப்புகளில் சேர ஆர்வம் உள்ள மாணவ மாணவியர் நீட் தேர்வுக்குவிண்ணப்பித்தனர். நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு 23 லட்சத்து 81 ஆயிரத்து 333 -பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இந்த நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் இன்று முதல் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம். https://neet.ntaonline.in/frontend/web/admitcard/index என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து பெயர், பிறந்த தேதி உள்ளிட்டவற்றை பதிவு செய்து விண்ணப்பதாரர்கள் ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நாடு முழுவதும் 557 நகரங்களில், 13 மொழிகளில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.14 வெளிநாடுகளிலும் நீட் தேர்வு நடக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *