தினமும் விருத்தாசலத்தில் காலை 6 மணிக்கு புறப்பட்டு 7 மணிக்கு அரியலூர் ரயில் நிலையம் வந்து 9 மணிக்கு திருச்சி ஜங்சன் வரும் ( train number 06891 ) பாசஞ்சர் இன்று முதல் தினமும் விழுப்புரத்தில் இருந்து அதி காலை 5.10 மணிக்கு புறப்பட்டு திருச்சி ஜங்சன் வரும்.
அதே போல் தினமும் மாலையில் திருச்சி ஜங்சனில் 6 மணிக்கு புறப்பட்டு ( train number 06892 ) அரியலூருக்கு மாலை 7.48 க்கு வந்து செந்துறை, மாத்தூர் என தற்போது நின்று விருத்தாச்சலம் வரை தற்போது செல்லும் பாசஞ்சர் ரயிலும் இன்று முதல் விழுப்புரம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. விழுப்புரத்திற்கு இரவு பத்தரை மணிக்கு சென்றடைகிறது.
அரியலூர், செந்துறை, மாத்தூர் பகுதி மக்கள் இந்த ரயிலில் ஏறி, விழுப்புரத்தில் இறங்கி புதுச்சேரி, திருப்பதி , திருவண்ணா மலை, சென்னைக்கு வேறு ரயில்களில்லோ, அல்லது பேருந்துகளிலோ , கார்களிலோ சுலபமாக செல்லலாம். அல்லது உளுந்தூர் பேட்டையில் இறங்கி அங்கு ரயில்நிலையம் அருகேயே உள்ள NH டோல்
உள்ளதால் express பஸ்களில் ஏறி சென்னை, திருப்பதி, திருவண்ணா மலைக்கு செல்ல வசதியாக இருக்கும்.
இது அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட மக்களுக்கு மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். இதை அரியலூர் பொதுமக்கள் வரவேற்று உள்ளனர்.
காலை பல்லவனுக்காகவும், இரவு பல்லவனுக்காகவும் பேருந்துக்கள் அரியலூர் ரயில் நிலையம் வருவதால், இந்த இரு பாசஞ்சர் ரயில் வரும் நேரத்தில் பேருந்துகள் இணைப்பும், அரியலூர் ரயில் நிலையத்திற்கு வரவும் , திரும்பி செல்லவும் ரயில் பயணிகளுக்கு கிடைக்கும் என்பதால் ரயில் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.