திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் கடந்த 15 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் திருமதி. ஜெயந்தி . அவர் தற்போது பணி நிறைவு பெற்றார். இதனை தொடர்ந்து அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளி தலைமையாசிரியர் எழியரசி தலைமையில் , மக்கள் சக்தி இயக்க
மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம் , பேராசிரியர் அருணாசலம் , ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
பள்ளி வள மைய மேற்பார்வையாளர் முஸ்தபா, மக்கள் சக்தி இயக்க மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ,பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் தியாகராஜன் மாநகராட்சி தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் தனலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் அறிவியல் ஆசிரியர் ஜெயந்தி அவர்களை பாராட்சி வாழ்த்துரை யாற்றினார்கள்.
விழாவில் பள்ளி மாணவ, மாணவியர் பணி நிறைவு பெற்ற தங்கள் ஆசிரியரிடம் வாழ்த்து பெற்றனர்.