இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் வசூலான ரூ.2,10,267 கோடி ஜிஎஸ்டியில், வசூலிக்கப்பட்ட வரி விவரங்கள்: மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ரூ. 43,846 கோடி.
மாநில சரக்கு மற்றும் சேவை வரி- ரூ. 53,538 கோடி
ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி ரூ. 99,623 கோடி,
செஸ் வரி – ரூ. 13,260 கோடி
தமிழகத்தில் இருந்து ஜி.எஸ்.டி வரியாக ரூ.12,210 கோடி வசூலாகியுள்ளது. ஜி.எஸ்.டி. வருவாயில் இதுவரையில் இல்லாத வகையில் அதிகபட்ச மாதாந்திர வசூலாக ஏப்ரல் மாதம் பதிவாகியுள்ளது. அதேநேரத்தில் கடந்தாண்டு (2023) ஏப்ரல் மாதம் கிடைத்த ஜி.எஸ்.டி தொகையை விட இந்தாண்டு கிடைத்த வருமானம்12.40 சதவீதம் அதிகம் ஆகும். கடந்தாண்டு ஏப்ரலில் ரூ.1,87,035 கோடி வசூலான நிலையில், இந்த ஏப்ரல் மாதம் ரூ.2,10,267 கோடி வசூலாகியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.