தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே விக்கிரமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. விழாவையொட்டி கிராமிய தப்பாட்டத்துடன் தீச்சட்டி, பால்குடம், அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. விழாவில் அம்மன் தேர் வீதி உலா, இரவு வாண வேடிக்கை, இசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.
இன்றுஇரவு இசை நிகழ்ச்சி நடைபெறும். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விக்கிரமம் கிராமத்தினர் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுக்கூர் காவல்துறையினர் செய்திருந்தனர்.