தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி நிறைவடைந்தது. தேர்தலை ஒட்டி கடந்த ஒரு மாதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின், கொளுத்தும் வெயிலிலும் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கொடைக்கானல் கோல்ஃப் மைதானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் (வலது)
இந்நிலையில் தேர்தல் முடிந்ததும் ஓய்வுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு 5 நாள் பயணமாக சென்றுள்ளார். கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கியுள்ளார்.

தொடர்ந்து பல்வேறு சுற்றுலா தலங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் செல்ல உள்ளதால் கொடைக்கானலில் போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.