கோவா- மும்பை நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. அதிகாலை 5 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தில் லாரியுடன் நேருக்கு நேர் மோதியதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இந்த பயங்கர விபத்தில் காரில் இருந்த ஒரு குழந்தை மூன்று பெண்கள் உள்பட 9 பேர் பலியாகினர். மும்பையை நோக்கி வந்து கொண்டிருந்த கார் ரத்னகிரி மாவட்டம் குஹாகர் பகுதி அருகே வந்த போது லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிகாலையில் பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் அதிவேகமாக வந்து லாரி எதிரே வருவதை கவனிக்காமல் இந்த விபத்து நடைபெற்றதா? அல்லது தூக்க கலக்கத்தில் விபத்து நடைபெற்றதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.