அரியலூர் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு மே தினமான இன்று அரியலூர் நகராட்சி ஏஐடியுசி சுகாதார தொழிலாளர் சங்கம் சார்பாக ஏஐடியுசி கொடியை சங்க தலைவரும், உள்ளாட்சித் துறை சம்மேளன மாநில செயலாளருமான த.தண்டபாணி அவர்கள் கொடியேற்றி மே தின வரலாறுகளையும், இன்றைய காலகட்டத்தில் தொழிலாளர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகள் குறித்தும் விளக்கிப் பேசி அனைவர்களுக்கும் இனிப்பு
வழங்கப்பட்டது. தொடர்ந்து புது நகராட்சி அலுவலகம் முன்பும் ஏஐடியுசி கொடியேற்றப்பட்டது. கொடியேற்று விழா நிகழ்ச்சியில் சங்க செயலாளர் ரெ.நல்லுசாமி, செ.மாரியப்பன், மா. கோபி, க. பெருமாள், பெ. பெரியசாமி, ரெ.வெங்கடேசன், மு.அமிர்தவள்ளி, பெ.காமாட்சி, ம.குருசாமி, நா.மாசி, பாஸ்கர், ஆறுமுகம், மோகன், வீ.உஷாராணி, ரா.தனலெட்சுமி, கே.சுமதி, ரா.ராணி, ஜானகி, தனுசுக்கொடி, நீ.சூரியா, செ.கலா, பாரதிதாசன் உட்பட திரளாக கலந்து கொண்டனர்.