பாகிஸ்தானில் செயல்படும் ஜாமியாத் உலேமா இ இஸ்லாம் பஜ்ல் என்ற அமைப்பின் தலைவர் மவுலானா பஜ்லூர் ரகுமான், அந்நாட்டு பார்லிமென்டில் பேசியதாவது: 1947 ஆகஸ்ட்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே நேரத்தில் சுதந்திரம் பெற்றன. இன்று இந்தியா சர்வதேச அளவில் சூப்பர் பவர் ஆக கனவு காண்கிறது. ஆனால், நாம் திவால் நிலையில் இருந்து தப்பிக்க பிச்சை எடுக்கிறோம். இதற்கு யார் காரணம்.
யாரோ எடுத்த முடிவினால் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு அரசியல்வாதிகள் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அமைப்புகளுக்கும், அதிகாரிகளுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. வெற்றியாளர்கள் வருத்தம் அடையும் வகையிலும், தோற்றவர்கள் மகிழும் வகையிலும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.