தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டையில் கிருஷ்ணன் கோயில் என்றழைக்கப்படும் பிரசன்ன ராஜகோபாலசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் தனுர் மாத பூஜை கடந்த டிசம்பர் 15ம் தேதி முதல் தொடங்கி நடந்து வந்தது . விழாவின் முக்கிய நிகழ்வான ராதா கல்யாணம் சங்கீத மகாலில் நடந்தது. நந்தகோப மகாராஜாவின் புத்திரன் கிருஷ்ண பரமாத்மாவுக்கும், வருசபானு கோபனின் புத்திரி ராதா பிராட்டிக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இதில் விழா குழுவினர் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.
