திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் அபிபு நிஷா (35 வயது) என்ற மனநல பாதிக்கப்பட்ட பெண் சுற்றி திரி வதாக எஸ் டி பி ஐ தர்கா கிளை செயற்குழு உறுப்பினர் சவுக்கத் அலியிடம் அப்பகுதி பொதுமக்கள் கூறியுள்ளனர். உடனே தர்கா கிளை தலைவர் இஸ்மாயில் தமிழ்நாடு பெண்கள் சேவை மையத்தை தொடர்பு கொண்டு அப் பெண்ணை காப்பகத்தில் சேர்ப்பதற்கான பணியை முன் னெடுத்து குணசீலம் அருகில் உள்ள காப்பகத்தில் சேர்ப்ப தற்காக திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் சி எஸ் ஆர் நகல் பெற்றுக் கொண்டு காப்பகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.