திருச்சி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இன்று மதியம் விமான நிலையத்தில் 4 இடங்களில் குண்டுகள் வெடிக்கும் என முகநூல் பக்கத்த்தில் மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. உடனடியாக தொழில் பாதுகாப்பு படையினர் , மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து விமான நிலையம் முழுவதும் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்பநாய் மூலம் சோதனை போட்டனர். ஆனால் 1மணி அவரை எந்த விதமான வெடிபொருட்களும் சிக்கவில்லை. எனவே இது மிரட்டலாக இருக்கலாம் என கருதப்படுகிறது.