திருச்சி மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பள்ளி மாணவ மாணவர்களுக்கான என் கல்லூரி கனவு என்ற தலைப்பில் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து அருகில் உள்ள கலையரங்கத்தில் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி மாணவர்கள் சில குறிப்பிட்ட படிப்புகளை மட்டுமே எடுத்து படித்து வருகின்றனர். ஆனால் பல்வேறு படிப்புகள் வேலை வாய்ப்புக்கு ஏதுவாக இருக்கிறது. எனவே
இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகள் இந்நிகழ்ச்சியை பயன்படுத்தி வேலை வாய்ப்புக்கான படிப்புகளை எடுத்து பயன்பெற வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் ஆர்த்தி கல்வி குழுமத்தின் ஸ்ரீஆர்த்தி மனோகரன் மற்றும் உத்வேக பேச்சாளர் டான் பாஸ்கோ வழிகாட்டியின் கிறிஸ்துமைக்கேல்ராஜ் ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மிருணாளினி , திருச்சி பழங்குடியினர் நலம் திட்ட அலுவலர் கீதா, தாட்கோ மாவட்ட மேலாளர் விஜயகுமார், எம்.எம்.டி மண்டல ஒருங்கிணைப்பாளர் நந்தினிதேவி, பெல் நியூடியூர் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், எம் எம் டி மாநில ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியன், பெல் நியூடியூர் மாநில ஒருங்கிணைப்பாளர் சிவானந்தம், மற்றும் கீழ்அன்பில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் மற்றும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவ – மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.