திருச்சி , லால்குடி அருகே புதூர்உத்தமனூரை சேர்ந்தவர் நல்லம்மாள். இவர் ஊ.ம.தலைவராக உள்ளார். இவரது மூத்த மகன் சுகுமார் (50). சுகுமார் பிஜேபி கட்சியில் புள்ளம்பாடி ஓன்றிய மண்டல பார்வையாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவரான இவரது தாய் நல்லம்மாளுக்கு உதவியாக ஊராட்சி தொடர்பான பணிகளை சுகுமார் கவனித்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான சின்டெக்ஸ் குடிநீர் டேங்கில் உள்ள பழுதை நீக்கும் பணியில் பணியாளர்களை வைத்து சுகுமார் சரி செய்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் ராம்குமார் (20). கார் டிரைவரான இவர் சுகுமாரிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டார். அப்போது 2 பேருக்குமிடையே இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராம்குமார் அருவாளை எடுத்து சுகுமாரை வெட்டியுள்ளார். இதில் சுகுமார் அலறியடித்து ஓடியுள்ளார். இதில் சுகுமாருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக சுகுமாரை லால்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸ் ஸ்டேசனில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்துவழக்கு பதிவு செய்து ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர்.