தஞ்சையில் உள்ள சுங்கான் திடல் அருகே மது பாட்டில் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் தஞ்சை கிழக்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்தப் பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினார். தொடர்ந்து அந்த வாலிபர் யார் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (37) என்பதும் கள்ளத்தனமான மதுபாட்டில்கள் விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து தப்பியோடிய கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனை செய்வதற்காக அவர் பதுக்கி வைத்திருந்து 100 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.