கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள ஜமீன் முத்தூர் ஒரு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் பல ஆண்டுகளாக காலம் காலமாக வசித்து வரும் பொதுமக்கள் இட நெருக்கடியில் வசித்து வருகின்றனர்.
இதனால் ஒரே வீட்டில் மூன்று குடும்பங்களுக்கு மேல் வசிப்பவர்களுக்கு அதே பகுதியில் உள்ள காலி இடத்தில் மாற்று இடம் வழங்கக்கோரி பலமுறை மனுக்கள் கொடுத்து வந்துள்ளனர் தற்போது வரை மாற்று இடம் கொடுக்காமல் அதிகாரிகள் அலைக்கழித்து வந்துள்ளனர் இந்நிலையில் காலி இடத்தில் வேறு பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு பட்டா வழங்க அதிகாரிகள் முயற்சி செய்துள்ளனர். இதுகுறித்து ஜமீன் முத்தூர் ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டபோது அலட்சியமாக பதில் அளித்ததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் எங்களுக்கு இப்பகுதியில் இடம் வேண்டும் எனக் கூறி நள்ளிரவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கேரளாவிற்கு கொண்டு செல்லும் காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வந்த வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது..
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அரசு அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமூக தீர்வு ஏற்படுத்தி தரப்படும் எனக் கூறியது அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.