ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறும். இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 31ம் தேதி தொடங்குகிறது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் முடியும் வரை அரசின் புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்த முடியாது.