கோடை காலத்தை சமாளிக்க பொதுமக்களுக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பாக கோடைகால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் கோடைகால தண்ணீர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தி உள்ளார். இந்நிலையில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பாக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் கோடைகால தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தண்ணீர் பந்தலில் மோர் , பானகம், இளநீர், வெள்ளரி பிஞ்சு, தர்பூசணி, பலாச்சுளை , சர்பத் , ஜூஸ் பாட்டில்களை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல், மாமன்ற உறுப்பினர் அரவிந்தன், நிவாகிகள் ரோஜர், பத்மநாதன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கடும் வெயில்… திருச்சியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு…
- by Authour
