இந்தியாவில் 13 மாநிலங்களில் 2ம் கட்ட வாக்குப்பதிவு 88 தொகுதிகளில் இன்று நடக்கிறது. காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் வாக்களித்தார். முன்னாள் முதல்வர் ஏ.கே. அந்தோணி, மற்றும் நடிகர் சுரேஷ் கோபி, ஆகியோரும் காலையில் வாக்களித்தனர்.
கர்நாடகத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, மத்திய அமைச்சர் நிர்மலா, நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோரும் காலையில் வாக்களித்தனர். காலை 11 மணிக்கு 13 மாநிலங்களிலும் பதிவான வாக்குப்பதிவு சதவீதம் வருமாறு:
அசாம் 27.43%, பீகார் 21.68%, சட்டீஸ்கா் 35.47%, மேற்கு வங்கம் 31.25%, மணிப்பூர் 33.22%, ஜம்மு காஷ்மீர் 26.61%, கேரளா 25.61, கர்நாடகா 23.34, ராஜஸ்தான் 26.84, உ.பி. 24.31%, மகாராஷ்ட்ரா18.83%, மத்திய பிரதேசம் 28.15%,