தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள வெள்ளாம் பரம்பூரை சேர்ந்தவர் புகழேந்தி (45). மருவூர் போலீசில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். கடந்த 13ம் தேதி ஏட்டு புகேழந்தி ஆலக்குடியில் உள்ள ஒரு தோப்பில் எலி மருந்து சாப்பிட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் தஞ்சாவூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஏட்டு புகழேந்தி அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து நடுக்காவேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏட்டு புகழேந்தி ஆன்லைன் ரம்மி விளையாடி ரூ.25 லட்சம் வரை இழந்துள்ளார். இதனால் கடன் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே விரக்தியில் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்..