இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (18.01.2023) சென்னை மாநிலக் கல்லூரியில் உள்ள அரங்கத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான
கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்தார். இதில் மாணவ, மாணவியருக்கு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிக் கையேட்டினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுதீன் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் கொ.வீரராகவ ராவ், மாநிலக் கல்லூரி முதல்வர் முனைவர் இரா.இராமன், பெருநகர சென்னை மாநகராட்சி துணைமேயர் மு.மகேஷ்குமார், மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) ஆ.ஜோதிமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை மாநிலக் கல்லூரியில் உள்ள அரங்கத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின், மாவட்ட
வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்து, போட்டித் தேர்வுகளுக்கான புத்தக கண்காட்சியினை பார்வையிட்டார்கள்.