மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய,மாநில அரசுகளை கண்டித்து மே 2ம் தேதி விவசாயிகள் போராட்டம். – திருச்சியில் நடந்த தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனைக் கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது.., காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டி தமிழகம் நோக்கி வரக்கூடிய காவிரி நீரை தடுத்து சட்ட விரோதமாக அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு விரைவுத் திட்ட அறிக்கையை தயார் செய்து, தற்பொழுது கட்டுமான பொருட்கள் இறக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. திமுக ஆட்சி காலத்தில் தான் பல்வேறு அணைகள் கர்நாடகாவில் கட்டப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிறுவாணி ஆற்றின் குறுக்கே சட்டவிரோதமாக இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக புதிய தடைப்பனைகள் கட்டி கேரளம் முடித்துள்ளது. இதனை தட்டிக் கேட்க தமிழக அரசு முன்வரவில்லை. மேகதாது அணை கட்டுவதற்கு திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு தடுக்கும் என்பதில் நம்பிக்கை இழந்து விட்டோம்..! கர்நாடகா அணையை கட்டுமானால் அதற்கு முழு பொறுப்பையும் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசே ஏற்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் கூட்டு சேர்ந்து மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு துணை போகிறதோ..? என அஞ்சத்த தோன்றுகிறது. எனவே தீவிர போராட்டத்தில் களமிறங்க அனைத்து அரசியல் கட்சிகளையும் விவசாயிகள் அமைப்புகளையும் வலியுறுத்துகிறோம்.
இதனை வலியுறுத்தி மேகதாது அணை கட்டுமானத்தை தடுத்து நிறுத்திட கோரி, முதற்கட்ட போராட்டமாக வருகிற மே இரண்டாம் தேதி தஞ்சாவூர் கீழ் காவேரி வடி நில வட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை
முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து, காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு முன் அனுபவம் பெற்றவர்களை சொற்பொறியாளர்கள் கண்காணிப்பு பொறியாளர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும். நீர் பாசனத்தை ஒழுங்குமுறைப்படுத்திடவும், கறைகளை பாதுகாத்திடவும் கரை காவலர்கள் தேவையான அளவிற்கு நியமித்திட வேண்டும். மேலும் பொறியாளர்கள் காலி பணியிடங்கள் விரைந்து நிரப்பிட வேண்டும்.
கர்நாடகா விடம் மாதாந்திர ஒதுக்கீட்டு தண்ணீரை மாதந்தோறும் பெற்று தரும் பொறுப்பை ஆணையமே மேற்கொள்ள வேண்டும். பழைய முறையில் காவிரி டெல்டாவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பாசன நீர் பங்கிட்டு முறையை அமல்படுத்த வேண்டும். தூர்வாரும் பணிகளை விவசாயிகள் ஆலோசனை பெற்று முன்னுரிமை அடிப்படையில் வெளிப்படை தன்மையுடன் நிறைவேற்ற வேண்டும். சரபங்கா திட்டம் புதிய ஆறு வெட்டுவதை கைவிட வேண்டும். மணல் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் அமைக்க வேண்டும்.
கர்நாடகாவிடம் மாதாந்திர ஒதுக்கீட்டு தண்ணீரை மாதம் தோறும் பெற்று தரும் பொறுப்பை ஆணையமே மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகள் இந்த கூட்டத்தின் வாயிலாக நிறைவேற்றப்பட்டது.