பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருனேஷ் திருச்சியில் உள்ள மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
ராஜஸ்தானில் நடைபெற்ற கூட்டத்தில் மோடி பேசிய வார்த்தைகளை இந்தியா கூட்டணி திரித்து பேசி வருகின்றனர்
இது தொடர்பாக விளக்கம் கொடுப்பதற்காக இந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ராஜஸ்தானில் மோடி பேசியதை மாற்றி, சொல்லாத பல விஷயங்களை சொல்லப்பட்டதாக காழ்ப்புணர்ச்சி உருவாக்க வேண்டும் என்ற தவறான கண்ணோட்டத்துடன் பேசப்படுகிறது.
ஹிந்தியில் பேசியதால் அது தெளிவாக புரிந்து கொள்ளவில்லை.
மொழிபெயர்ப்பு என்ற பெயரிலே புதிய புதிய அர்த்தங்கள் கற்பிக்கப்படுகிறது.
இந்தியாவில் இருக்கிற வந்தேரிகள் எனக் குறிப்பிட்டுள்ளார்
சிறுபான்மையினரை அவர் குறிப்பிடவில்லை.
வெளியில் இருந்து வந்து, ஆதாரமும் இல்லாமல் தங்கி இருக்கிறவர்களை மட்டுமே
அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் இஸ்லாமிய நாடுகளில் கூட அடைக்கலம் கொடுக்காமல் அவர்கள் மேற்கு வங்கம் வழியாக இந்தியாவுக்கு வந்தவர்களை குறிப்பிட்டு தான் அவர் சொல்லி இருக்கிறார்.
பிரதமர் தானாக பேசவில்லை முன்னாள் பிரதமர் மன்மோகன் என்ன பேசினார் என்பதன் விளக்கத்தை தான் அவர் பேசியுள்ளார்.
தொடக்கத்தில் வந்த கருத்துக்கணிப்பில் வெற்றி பெறுவார்கள் என்று சொன்ன போதும் அதனை வைத்து எங்கள் கட்சியினர் அதை பெரிதுபடுத்தி பேசவும் இல்லை, திமுக தான் வரும் என்று சொன்னபோதும் துவண்டு போகவில்லை.
தற்போது தான் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மலர்ந்து வருகிறது. எத்தனையாவது இடத்தைப் பிடிக்கிறோம், வாக்கு சதவீதம் என்ன என்பதுதான் எங்களுடைய இலக்கு.
எனவே, எங்களது தலைமையில் கூட்டணி அமைத்து நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
திமுக, அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் காமராஜர் இருந்த காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை விட எந்த திட்டமும் இதுவரை கொண்டு வரப்படவில்லை.
கருத்து உருவாக்கம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கவில்லை. தமிழகத்தில் அச்சு ஊடகங்கள், ஒளி ஊடகங்களும் ஒரே இடத்தில் இருக்கிறது. கருத்துருவாக்கத்தை செய்ய முடியும் என்று நினைக்கிறார்கள்.
தமிழகத்தில் பாதிப்பு என எடுத்துக் கொள்ள முடியாது. இழப்பதற்கு ஒன்றுமில்லை
தமிழகத்தில் நாங்கள் உருவாக்குகிறோம்.
தமிழ்நாடு முடிவு குறித்து கவலை இல்லை, தமிழ்நாடு தேவையும் இல்லை, தமிழ்நாடு இல்லாமல் நாங்கள் 420 இடத்தை பிடிப்போம் என ஏற்கனவே சொல்லிவிட்டார்.
நைனார் நாகேந்திரன் 4 கோடி ரூபாய் தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு
சட்டம் தன் கடமையை செய்யட்டும்.
பாஜக தனியாக நிற்காமல் கூட்டணி அமைத்து நிற்பது ஏன் என்ற கேள்விக்கு
இதே கேள்வி திமுகவிடம் கேட்பீர்களா என்று எனக்கு தெரியாது.
திமுக தனது சொந்த காலில் நின்றால் டெபாசிட் கூட வாங்காது. அவர்கள் தெளிவாக திட்டமிட்டு ஒரு கம்பெனி போல நடத்துகிறார்கள் என தெரிவித்தார்.
பேட்டியின் போது மாவட்ட தலைவர் ராஜசேகர், மாநிலம் நிர்வாகி புரட்சிக்கவிதாசன் உட்பட்ட பலர் உடன் இருந்தனர்.