நடிகர் மன்சூர் அலிகான் என்ற பெயரை கேட்டாலே பிரச்னை தானா வரும். பெரும்பாலான கட்சிகளின் ஆதரவாளராக இருந்தவர் இவர். பல கட்சிகளையும் தொடங்கி நடத்தி வந்தார். தேர்தல்ன்னு வந்துட்டா, முதல் ஆளா களத்துக்கு வந்துருவாரு. இந்த முறையும் வேலூர் மக்களவை தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டார். தேர்தல் தினத்தில் பலாப்பழ சின்னம் ஏன் கருப்பா இருக்கு என்று பூத்தில் இருந்த அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார்.
இப்படிப்பட்ட பரபரப்பு, காமெடிக்கு கதாநாயகனாக வலம் வரும் நடிகர் மன்சூர் அலிகான் இன்று சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து மாநில தலைவர் செல்வபெருந்தகையிடம் ஒரு மனு கொடுத்தார். அதில் நான் காங்கிரஸ் காரன் தான். மீண்டும் காங்கிரசில் சேர விரும்புகிறேன். ராகுல் முன்னிலையில் சேர வி்ரும்புகிறேன் என அதில் கூறி இருந்தார்.
அந்த மனுவை வாங்கிக்கொண்ட செல்வப்பெருந்தகை ஆவன செய்வதாக கூறினார். சிறிது நேரத்தில் மன்சூர் அலிகான் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அப்போது அங்கிருந்த சிலர், வடிவேலு படத்தில் உள்ள நகைச்சுவை காட்சியான, ஆகா…… சைத்தான் சைக்கிளில் வாறான் என்றனர். இதனால்அங்கு இருந்த அனைவரும் சிரித்து விட்டனர்.
பின்னர் மன்சூர் அலிகான் அளித்த பேட்டி: காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு கடிதம் கொடுத்துள்ளேன். முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன். மீண்டும் தாய் கட்சியில் இணைய உள்ளேன். இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை காங்கிரசுடன் இணைக்க முடிவு செய்துள்ளேன்/ இவ்வாறு அவர் கூறினார்.