திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக திருச்சி குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. திருச்சி மண்டல காவல்துறை கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் பேரில் திருச்சி சரக டிஎஸ்பி சுதர்சன் அறிவுறுத்தலின்படி இன்ஸ்பெக்டர் கோபிநாத், எஸ்ஐ கண்ணதாசன், மணப்பாறை வட்ட வழங்கல் அலுவலர் சரவணன் மற்றும் தனி வருவாய் அலுவலர் மணிமாறன் ஆகியோர்களுடன் இணைந்து சம்பவ இடமான மணப்பாறையில் இருந்து குளித்தலை செல்லும் சாலையில் உள்ள கலிங்கப்பட்டி பிரிவு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியை கடந்து செல்ல வந்த TN 51 M 2758 என்ற Bolero Pickup லோடு வாகனத்தை நிறுத்தி சோதனையிட முயன்ற போது டிரைவர் இறங்கி தப்பி ஓடி உள்ளார். இதனை தொடர்ந்து வாகனத்தை சோதனை செய்து பார்த்தபோது தலா 50 கிலோ வீதம் 55 மூட்டைகளில் 2750 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து வாகனத்தையும் அதில் இருந்த ரேஷன் அரிசியையும் கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவரை தேடி வருகின்றனர்.