கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள போடிபாளையத்தில் பிரசித்தி பெற்ற பத்திரகாளி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது..
இங்கு வருடம் தோறும் சித்திரை மாதம் குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருவது வழக்கம்..
இந்த ஆண்டிற்கான குண்டம் திருவிழா கடந்த எட்டாம் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது அதைத் தொடர்ந்து மீன்குளத்தி பகவதி அம்மன் கோவில் அவிநாசி, கொடுமுடி, திரௌபதி அம்மன் தர்மராஜா ஆலயங்களில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து கொலு வைத்து கொடிமரம் கட்டி நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது..
திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா கோயில் வளாகத்தில் நேற்று இரவு 50 அடி நீளம் கொண்ட
குண்டத்தில் அக்னி வளர்க்கப்பட்டது அதைத் தொடர்ந்து சிங்க வாகனத்தில் அம்மன் ஊர்வலமாக வந்து பூ குண்டம் அருகே வான வேடிக்கையுடன் அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது..
இதைத் தொடர்ந்து விரதம் இருந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பத்ரகாளியம்மன் தாயே போற்றி என குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்..
இந்த குண்டம் திருவிழாவை காண சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பத்ரகாளியம்மனை சாமி தரிசனம் செய்தனர்.