தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே நேற்று இரவு பைக் மீது லோடு ஆட்டோ மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
பாபநாசம் அருகே வேம்பக்குடியைச் சேர்ந்தவர்கள் ஜெகன் (30), கூட்டுறவுத்துறை தற்காலிக ஊழியர், சென்ட்ரிங் தொழிலாளி பாக்கியராஜ் (40). இவர்கள் இருவரும் வேம்பக்குடி புறவழிச்சாலையில் பைக்கில் நேற்று இரவு சென்று கொண்டிருந்தனர். அப்போது, திருச்சியில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த லோடு ஆட்டோ , பைக் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெகன், பாக்கியராஜ் இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இது குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.