சென்னை திருமங்கலத்தில் அமைத்துள்ள வி.ஆர்மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து போலீசாருக்கு இ.மெயில் வந்தது. இன்னும் சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும். வேண்டுமென்றால் தீவிரமாக சோதனை நடத்தி வெடிகுண்டை கண்டுபிடித்து கொள்ளுமாறும் இ-மெயில் வந்துள்ளது.
இதனை தொடர்ந்து மோப்ப நாய் பிரிவு போலீசார்10 பெரும், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் 10 நபர்களும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தைகைய VR மாலில் ஒரே நாளில் 10,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொருட்களை வாங்குவதற்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் உள்ளே வருவது வழக்கம். இந்த நிலையில் இன்று மதியம் 1 மணி அளவில் காவல் கட்டுப்பாட்டறை இ-மெயிளில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த ஜனவரி மாதத்திலிருந்து சென்னையில் உள்ள பள்ளி கூடங்கள், கல்லூரிகள், கோவில்,விடுதிகள் உள்ளிட்ட 50 இடங்களில் மர்ம நபர் இ-மெயில் மூலமாகவும், செல்போன் மூலமாகவும் தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் சென்னை போலீசார் இதுவரை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஒரு குற்றவாளியை கூட கண்டுபிடிக்க முடியவில்லை.
அதே போல் ஐ.டி.ஐ.டி.ஐ மூலமாகவும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் மர்ம நபர்கள் மீண்டும், மீண்டும் சென்னையில் இருக்கக்கூடிய தனியார் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், தனியார் விடுதிகள், நட்சத்திர விடுதிகள், புனித ஸ்தலங்கள் உள்ளிட்டவற்றிற்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது வருகின்றனர். மேலும் பொதுமக்கள் யாரும் அச்சப்படவேண்டாம் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.