தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சாரங்கபாணி கோவில் சித்திரைத் திருவிழாவுக்கான கொடியேற்றம் கடந்த 15ம் தேதி விமரிசையாக நடந்தது. தினந்தோறும் சுவாமி வீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது. இந்த கோவிலின் தேர் தமிழகத்தின் 3 பெரிய தேர் என்ற சிறப்பு பெற்றது.
கடந்த சில நாட்களாக தேர் அலங்காரம் செய்யப்பட்டது. இன்று காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத சாரங்கபாணி சுவாமி தேரில் எழுந்தருளியதைத் தொடர்ந்து தேர் வடபிடித்து இழுக்கப்பட்டது. ஆயிரகணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர். சாரங்கபாணி தெற்கு வீதியில் தேர் வந்தபோ சரியாக 10 மணி இருக்கும். குடிநீர் குழாய்க்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் தேரின் முன் இடதுபுற சக்கரம் பள்ளத்தி்ல் இறங்கியது.
அந்த இடத்தில் மண் போதிய அழுத்தம் இல்லாததால் தேர் சக்கரம் தரையில்2 அடி கீழே பதிந்து அப்படியே சாய்ந்தபடி நின்றது. உடனடியாக பக்தர்கள் தேர் அருகில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். உடனடியாக அந்த பகுதியில் ஜல்லிகள் கொட்டி பொக்ளின் மூலம் தேர் மீட்கும் பணி நடந்தது. சரியாக 1 மணி அளவில் , அதாவது 3 மணி நேரத்திற்கு பிறகுதேர் பள்ளத்தில் இருந்து மேலே எழும்பியது. அதன்பிறகு பக்தர்கள் கொளுத்தும் வெயிலிலும் தேர் வடம்பிடித்து இழுத்தனர்.