இந்த திரைப்படத்தில் முதன் முதலாக விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருந்தது நடிகை த்ரிஷா இல்லயாம். முதன் முதலாக வேறொரு நடிகை தான் நடிக்க இருந்தாராம். அந்த நடிகை வேறு யாரும் இல்லை 90 ஸ் காலட்டத்தில் ட்ரென்டிங் நடிகையாக வளம் வந்த நடிகை கிரண் தான். இவரிடம் தான் முதன் முதலாக கில்லி படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றதாம்.
ஆனால், அந்த சமயம் இந்த படத்தின் மீது நடிகை கிரண் பெரிய அளவில் ஆர்வம் காட்டாமல் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்துவிட்டாராம். இந்த தகவலை கிரண் சமீபத்திய பேட்டி ஒன்றில் வேதனையுடன் தெரிவித்து இருக்கிறார். கிரண் நடிக்க மறுத்த பிறகு தான் படத்தின் கதையை இயக்குனர் த்ரிஷாவிடம் கூறி அவருக்கு கதை ரொம்பவே பிடித்து போக உடனடியாக படத்தில் நடிக்கவும் சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.
கிரண் கில்லி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க மறுத்துள்ள தகவலை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு பெரிய வாய்ப்பை இப்படி மிஸ் பண்ணிடீங்களே மேடம் என்று கூறி வருகிறார்கள். மேலும், கில்லி படம் கடந்த ஏப்ரல் 20 -ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.